Thanthi Publications. Product Reviews. வரலாற்றுச் சுவடுகள் COMBO OFFER. Varalatru Suvadugal Part1 ,2 ,3, 4 (1937 - 2018)
 

வரலாற்றுச் சுவடுகள் COMBO OFFER

No reviews

வரலாற்றுச் சுவடுகள் பாகம் - 1

‘வரலாற்றுச் சுவடுகள்’ என்னும் பெயரில் தினத்தந்தி உருவாக்கிய ஓர் அரிய ஆவணம் இந்நூல்.
இந்த நூலில் ‘உலகம்’ என்ற தலைப்பில் ‘முதலாம் உலகப்போர்’ மூண்டதற்கான காரணம் மற்றும் ‘இரண்டாம் உலகப்போர்’ பற்றிய விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘இந்தியா’ என்ற தலைப்பில், ‘இந்திய சுதந்திரப் போராட்டம்’ தொடங்கி ‘மகாத்மா காந்தி சுட்டுக்கொலை’ வரையிலான செய்திகள் உள்ளன.
‘இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் 552 சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைப்பு, காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு, இந்தியா குடியரசு நாடாக மலர்ந்த வரலாறு, இந்தியா மீது சீனா படையெடுப்பு, நேரு, சாஸ்திரி மரணம், பிரதமர் தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி, மொரார்ஜி தேசாய் துணை பிரதமர் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘இந்திய முக்கிய நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைப்பு, அணா நாணயம் அகன்று ‘நயா பைசா’ நாணயம் அறிமுகம் போன்ற செய்திகள் உள்ளன.
‘தமிழக அரசியல்’ என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சி, பெரியார்-மணியம்மை திருமணம், தி.மு.க. உதயம், தமிழக
முதல்-அமைச்சராக காமராஜர், தமிழ்நாடு பெயர் மாற்றம் ேகாரி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம், தமிழ்நாட்டில் நிகழ்ந்த மொழிப்போராட்டம், காங்கிரசுக்கு எதிராக கூட்டணி, தமிழகத்தை உலுக்கிய எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வரலாற்றுச் சுவடுகள் பாகம் - 2

‘வரலாற்றுச் சுவடுகள்’ என்னும் பெயரில் தினத்தந்தி உருவாக்கிய ஓர் அரிய ஆவணம் இந்நூல்.
இந்த நூலில் ‘உலகம்’ என்ற தலைப்பில், சந்திரனில் மனிதன் கால் பதித்த நிகழ்ச்சி, அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்தார் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘இந்திய அரசியல்’ என்ற தலைப்பில், இந்தியா மீது பாகிஸ்தான் திடீர் படையெடுப்பு, ‘வங்காள தேசம்’ சுதந்திர நாடானது, தேர்தலில் இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்த அதிர்ச்சி தீர்ப்பு, நெருக்கடி நிலை பிரகடனம், தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார், சரண்சிங் ஆட்சி கவிழ்ந்தது, இந்திரா காந்தி மீண்டும் பிரதமர், சஞ்சய் காந்தி மரணம், இந்திரா காந்தி சுட்டுக்கொலை, ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார் போன்ற செய்திகள் உள்ளன.
‘இந்திய முக்கிய நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் விமான விபத்தில் மோகன் குமாரமங்கலம் மரணம், இலங்கைக்கு கச்சத்தீவு ‘தானம்’, எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியைப் பிடித்தார் என்.டி.ராமராவ் முதலான செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘தமிழக அரசியல்’ என்ற தலைப்பில் அண்ணா மறைந்தார், ஆட்சி பீடத்தில் கருணாநிதி, தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து, தி.மு.க. தலைமைக்கு எதிராக எம்.ஜி.ஆர். போர்க்கொடி, தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். நீக்கம், அ.தி.மு.க. உதயம், ராஜாஜி, பெரியார், காமராஜர் மரணம், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு,
எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு, அமெரிக்காவில் சிகிச்சை ஆகிய தகவல்கள் உள்ளன.

வரலாற்றுச் சுவடுகள் பாகம் - 3

‘வரலாற்றுச் சுவடுகள்’ என்னும் பெயரில் தினத்தந்தி உருவாக்கிய ஓர் அரிய ஆவணம் இந்நூல்.
இந்த நூலில் ‘உலகம்’ என்ற தலைப்பில், மாலத்தீவில் ஏற்பட்ட திடீர் புரட்சியை இந்திய ராணுவம் அடக்கியது, 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலா விடுதலை, சோவியத் ரஷியா உடைந்து சிதறியது, உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் தேர்வு, பாரீஸ் நகரில் கோடீஸ்வர காதலருடன் இளவரசி டயானா பலி, அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர், அமெரிக்காவில் 110 மாடி இரட்டை கோபுரம் தகர்ப்பு, பெனாசிர் படுகொலை, ஒபாமா பிரதமர் ஆனார், இலங்கையில் கால் நூற்றாண்டு போர் ஓய்ந்தது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் வி.பி. சிங் பிரதமர் ஆனார், மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறை, அவரது ஆட்சிக் கவிழ்ப்பு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை, நரசிம்மராவ் பிரதமர், பாபர் மசூதி இடிப்பு, மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி, கார்கில் போர், வாஜ்பாய் மீண்டும் பிரதமர், தமிழக விஞ்ஞானி அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்பு, மன்மோகன்சிங் பிரதமர், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆனார். டெல்லியில் ‘ஆம்ஆத்மி’ ஆட்சியைப் பிடித்தது. நரேந்திர மோடி பிரதமர் ஆனார் போன்ற தகவல்கள் உள்ளன.
‘தமிழக அரசியல்’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். மரணம், கருணாநிதி மந்திரிசபை ‘டிஸ்மிஸ்’, ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார், நள்ளிரவில் கருணாநிதி கைது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மரணம் முதலான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வரலாற்றுச் சுவடுகள் பாகம் - 4

‘வரலாற்றுச் சுவடுகள்’ என்னும் பெயரில் தினத்தந்தி உருவாக்கிய ஓர் அரிய ஆவணம் இந்நூல்.
இந்த நூலில் ‘உலகம்’ என்ற தலைப்பில், இலங்கை தேர்தலில் ராஜபக்சே தோல்வி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து பாராளுமன்றம் ஒப்புதல், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார், இலங்கையில் 51 நாட்கள் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் அப்துல் கலாம் காலமானார், ‘500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு, நாடு முழுவதும் சரக்கு சேவை வரி அமல், ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு, வாஜ்பாய் மரணம் ஆகிய செய்திகள் இடம் பிடித்துள்ளன.
‘இந்திய முக்கிய செய்திகள்’ என்ற தலைப்பில், கேரளா கோவில் விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 111 பேர் பலி, இஸ்ரோ புதிய தலைவராக கே.சிவன் நியமனம், குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் உலகிலேயே உயரமான படேல் சிலை போன்ற தகவல்கள் உள்ளன.
‘தமிழக அரசியல்’ என்ற தலைப்பில் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை, ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர், ஜெயலலிதா மரணம், அ.தி.மு.க. ‘எம்.எல்.ஏ.’க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு, சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை, புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பு, கருணாநிதி மரணம் போன்ற செய்திகள் உள்ளன.

₹1,000.00
வகை: வரலாறு

ஆண்டு 2019
பக்கங்கள் 1168
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் வரலாறு
மொழி தமிழ்
ISBN No
ஐ.சண்முகநாதன்

ஐ. சண்முகநாதனின் சொந்த ஊர் திருச்சி. பெற்றோர்: கே.வி. ஐயன் பெருமாள் பிள்ளை-சீதா ஜானகி அம்மாள். 19-வது வயதில் “தினத்தந்தி”யில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரிடம் குருகுல வாசம் பயின்றார். செய்தி ஆசிரியர், ஆசிரியர் என்று உயர்ந்தார்.

சண்முகநாதன் ஓர் எழுத்தாளரும் ஆவார். ‘இதய தாகம்’, ‘கந்தர்வ கானங்கள்’, ‘இதயம் எழுதிய கவிதை’, ‘வாழ்க்கை ஒரு வானவில்’ உள்பட 15 நாவல்கள் எழுதியுள்ளார். 50- க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துள்ளார்.

‘20-ம் நூற்றாண்டு வரலாறு’, ‘சங்ககாலம் முதல் செம்மொழிக்காலம் வரை தமிழக வரலாறு’, ‘உலக வரலாறு’ ஆகிய நூல்களையும், DVD களையும் உருவாக்கியுள்ளார். இவற்றை மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பார்த்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Daily Thanthi Publication
*
*
*