Thanthi Publications. Product Reviews. வா... என்று அழைக்கும் திருவண்ணாமலை. Vaa... Entru Alaikkum Thiruvannamali
 

வா... என்று அழைக்கும் திருவண்ணாமலை

No reviews

திருவண்ணாமலை என்றதும் அருணாசலேஸ்வரரும், கிரிவலமும் நம் மனதில் தோன்றும். ஆனால் திருவண்ணாமலைக்கு மேலும் கணக்கிட முடியாத அளவுக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன.
அத்தகைய திருவண்ணாமலை தலம் பற்றிய எல்லா தகவல்களையும் ஒருங்கே கொண்ட அற்புத களஞ்சியமாக இந்த நூலை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான செ.செந்தில்குமார் எழுதியுள்ளார். இந்த நூலில் திருவண்ணாமலையின் சிறப்புகள், 1000 ஆண்டுகளாக ஆலயம் கட்டப்பட்ட அதிசயம், 142 சன்னதிகள், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், நந்தி பற்றிய தகவல்கள் உள்ளன.
மேலும் திருவண்ணாமலை தலத்தில் 12 மாதங்களும் நடக்கும் வித்தியாசமான விழாக்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அண்ணாமலையார் தர்ப்பணம் கொடுப்பது, ஊடல் கொள்வது, வித்தியாசமான மன்மத தகனம் போன்ற விழாக்களை சொல்லலாம்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்கள் மற்றும் கிரிவலம் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதியில் திருவண்ணாமலை தலம் பற்றி ஆச்சரியப்படுத்தும் 100 தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எளிய நடை, பக்கத்துக்கு பக்கம் படங்கள், ஆங்காங்கே சிறப்பு துணுக்குகள் என்று புத்தகம் திருவண்ணாமலை தகவல் களஞ்சியமாக உள்ளது.
ஒவ்வொரு தகவலும் ஆழமானது. ஆத்மார்த்தமானது. அருணாசலேஸ்வரர் பற்றியும், திருவண்ணாமலை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

Delivery: 3-5 days
₹150.00
வகை: ஆன்மிகம்

ஆண்டு 2020
பக்கங்கள் 288
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் ஆன்மிகம்
மொழி தமிழ்
ISBN No 9789389595048
செ.செந்தில் குமார்

இந்நூலின் ஆசிரியர் செ. செந்தில்குமார். இவர் தமிழ்நாட்டின் நம்பர் - 1 மாலை நாளிதழான சென்னை மாலைமலரில் பொறுப்பாசிரியராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத் துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படிக்கும்போது கேம்பஸ் நியூஸ் இதழில் ஏராளமான கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ராணி வார இதழில் துணை ஆசிரியராக பணிபுரிந்த போது, வேலூர் சிறையில் உள்ள பெண் கொலையாளிகள் பற்றி ஆய்வு செய்து, பெண் கைதிகளின் உண்மை கதையைத் தொடராக எழுதினார். அமானுஷ்யம் தொடர்பான ஆவியே நில் கொல் என்றொரு தொடர் எழுதியுள்ளார். கொல்லிமலை குள்ளன் என்ற சிறுவர் கதையை சிந்து எனும் புனைப்பெயரில் படைத்துள்ளார். தற்போது மாலைமலரில் சீரடி சாய்பாபா தொடர், ராணி வார இதழில் வெளிச்சத்துக்கு வரும் சித்தர்கள் தொடர் எழுதியுள்ளார்.

Daily Thanthi Publication
*
*
*