மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவதற்கும், மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவதற்கும், முக்கியக் காரணம், இலக்கு இல்லாத மாணவப் பருவமும், தாழ்வு மனப்பான்மையுமே ஆகும்.
தோல்வி கற்றுத்தரும் பாடமே, மிகச் சிறந்த பாடம்.
அந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
தோல்வியின் பாடத்தைக் கற்றுக்கொண்டு வறுமையிலும் சாதித்தவர்களை, கற்றல் குறைபாட்டிலும் சாதித்தவர்களை, உடல் குறைபாடு இருந்து சாதித்தவர்களை இந்த நூலில் பேராசிரியர் முனைவர் அ.முகம்மது அப்துல்காதர் மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
இதன்மூலம் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தோல்வியைத் துரத்தி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனதில் விதைக்கிறார். அவர்களின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெறத்துடிக்கும் மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்.
பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல் காதர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செண்டு பொறியியல் கல்லூரியில் முதல்வராக உள்ளார். 19 ஆண்டுகள் பேராசிரியராகவும் 8 ஆண்டுகள் முதல்வராகவும் பணிபுரிந்து வருகிறார். நாளிதழ் மற்றும் வார இதழ்களில் மாணவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தன்னம்பிக்கை கட்டுரைகளை எழுதி வருகிறார். தினத்தந்தி நாளிதழில் கல்விமலர், இளைஞர்மலர் மற்றும் 4ஆம் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்வேறு தொலைகாட்சிகளிலும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சிறந்த கல்வியாளர் மற்றும் சிறந்த முதல்வர் என 5 விருதுகளை பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் அமைப்புகள் சார்பாக அழைக்கப்பட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தன்னம்பிக்கை பற்றி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.