Thanthi Publications. Product Reviews. திரை உலக அதிசயங்கள். Thirai Ulaga Athisayangal
 

திரை உலக அதிசயங்கள்

No reviews

சினிமா உலகம் பற்றி இதுவரை ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதிலும் இந்த நூல், மற்ற புத்தகங்களை விட வித்தியாசமான ஒன்று.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டில் நடந்த அதிசய சம்பவங்கள் & இதுவரை நாம் அறிந்திராத பல அரிய செய்திகளைக் காணலாம்.

தினத்தந்தி “முத்துச்சரம்” பகுதியில் வெளியானபோதே வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது.

“பைத்தியக்காரன்” என்ற படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., கதாநாயகி யார் தெரியுமா? டி.ஏ.மதுரம்; நடிகை பி.எஸ்.சரோஜா கொஞ்ச காலம் ஒரு சர்க்கஸ் கலைஞராக இருந்தவர்; தமிழில் அதிர்ச்சி தோல்வி தந்த படங்களில் எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியும் இடம்பெற்றது; ஒரு நடிகையைத் திருமணம் செய்ய 3 இந்தி நடிகர்கள் போட்டா போட்டி. அந்த நடிகை ஹேமமாலினி;

மும்பையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திப்படம்; அகில உலக கனவுக்கன்னி மர்லின் மன்றோவின் போராட்ட வாழ்க்கை என்பன போன்ற எண்ணற்ற தகவல்களைத் தருகிறார், திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்.

மொத்தத்தில் இந்நூல் சினிமாவை நேசிப்பவர்களை வசப்படுத்தும் வாசமலர்.

Delivery: 1 week
₹180.00
வகை: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை

ஆண்டு 2018
பக்கங்கள் 2018
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் சினிமா
மொழி தமிழ்
ISBN No 978-81-936633-9-4
திருநின்றவூர் ச.சந்தானகிருஷ்ணன்

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன். இவருடைய பெற்றோர் வேங்கட முதலியார் - சிவகாமி அம்மாள். சிறு வயதில் இருந்தே இசைத் தட்டுகளைச் சேகரிக்கத் தொடங்கினார், சந்தான கிருஷ்ணன். 1931-ம் ஆண்டு வெளிவந்த காளிதாஸ் திரைப்படம் முதல் இன்று வரை வெளிவந்துள்ள திரைப்படம் வரை சகல இசைத் தட்டுகளும், ஆடியோ கேசட்டுகளும் இவரிடம் உள்ளன. இவரிடம் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி விட்டன. தமிழ் இசைத் தட்டுகள் மட்டுமல்ல, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு முதலிய மொழிகளில் வெளியான சிறந்த இசைத்தட்டுகள், திரைப்படங்கள் ஆகியவையும் உண்டு.அதுமட்டுமல்ல, ஸ்டாலின், சர்ச்சில், மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, ஹிட்லர், முசோலினி, கென்னடி போன்ற உலகத் தலைவர்களின் பேச்சுகள் கொண்ட இசைத் தட்டுகளும் உண்டு. உலகப் போர் அறிவிக்கப்பட்டபோது, வெளியான அறிவிப்புகள், அணுகுண்டு வெடித்தபோது எழுந்த சப்தங்கள் போன்றவையும் ஒலித்தட்டாக இவரிடம் உள்ளன. 1930-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கிராமபோன் பெட்டி உள்பட பல்வேறு வகையான கிராமபோன் பெட்டிகளும் உண்டு. இத்தகைய சாதனையை நிகழ்த்திய சந்தான கிருஷ்ணன், ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி இந்த இசைத் தட்டுகளை எல்லாம் நிரந்தரமாகப் பாதுகாத்து வர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

Daily Thanthi Publication
*
*
*