Thanthi Publications. Product Reviews. செய்தி தரும் சேதி. Seithi Tharum Sethi - 9788193584088
 

செய்தி தரும் சேதி

No reviews

உலகச் செய்திகள், தேசச் செய்திகள், மாநிலச் செய்திகள், மாவட்டச் செய்திகள் என்று அனைத்துச் செய்திகளாலும் இன்றைய செய்தித் தாள்கள் அலங்கரிக்கப்படுகின்றன. நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள், பல சேதிகளைத் தாங்கி வருகின்றன. சில செய்திகள் நம் இதயங்களை ஈர்க்கின்றன. இன்னும் சில செய்திகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. பல செய்திகள், நமக்கு அனுபவங்களைத் தருகின்றன. நாம் படிக்கின்ற பல்வேறு செய்திகள், நமக்குப் படிப்பினைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றன.
அப்படிப்பட்ட செய்திகள் தரும் சேதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும் பேச்சாளருமான வெ.இறையன்பு, தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். அந்த வாசமிகு கட்டுரைத் தொடர், வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் நடமாடும் ஒப்பற்ற மனிதர்களின் உன்னத செயல்பாடுகளை இந்த நூலில் அவர் சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். சுவையான சொல் விருந்து.

Delivery: 1 week
₹150.00
வகை: பொது அறிவு

ஆண்டு 2017
பக்கங்கள் 240
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் பொது அறிவு
மொழி தமிழ்
ISBN No 9788193584088
வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

‘தினத்தந்தி’ நாளிதழை ஏழு வயதிலிருந்தே நான் படித்து வருகிறேன் என்றாலும், அது இதழ் அல்ல; இயக்கம்; தாளல்ல; ஆவணம் என்பதை நான் இத்தொடர் மூலம் உணர்ந்தேன். ஆட்சியாளர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் படிக்கிற செய்தித்தாள் இது என்பது எதிர்வினைகளால் எனக்குப் புரிந்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலாய் மறையாமல், கருத்தைக் கவரும் நிலவாய் இந்த செய்தித்தாள் நீடிப்பதன் ரகசியம் எனக்கு பிடிபட்டது. என் மாலையில் வராத பல மலர்கள் இன்னும் தோட்டத்திலேயே சிரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விதையை பல இடங்களில் தூவினேன். ‘தினத்தந்தி’ என்ற வயலில்தான் இது அறுவடையானது. இதை வாசித்த வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். வெ. இறையன்பு

Daily Thanthi Publication
*
*
*