Thanthi Publications. Product Reviews. ரகசியமான ரகசியங்கள். Ragasiyamana Ragasiyangal
 

ரகசியமான ரகசியங்கள்

5.0 2

தினத்தந்தியின் முத்துச்சரத்தில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ‘ரகசியமான ரகசியங்கள்’, அரிய புகைப்படங்களுடன் புத்தகமாகி இருக்கிறது. ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன் எழுதிய வரலாற்று ஆய்வுகளில் இது முக்கியமானதாக திகழ்கிறது. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தின் காலடியில் மறைந்து கிடந்த, மறைக்கப்பட்ட ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் அவர் தந்திருக்கிறார். வரலாறு என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் பக்கத்திற்குப் பக்கம் விறுவிறுப்பாக செல்கிறது. அந்தந்த காலச்சூழலுக்கே நம்மை அழைத்துச் சென்று அந்த ஆளுமைகளோடு பயணிப்பது போன்ற உணர்வை ஒவ்வோர் அத்தியாயமும் ஏற்படுத்துகிறது. இதுவரை நாம் படித்தவை, கேட்டவற்றைத் தாண்டி ஏராளமான புதிய தகவல்களுடன் வரலாற்றை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைகளைப் பற்றி படிக்கும் போது கண்கள் குளமாகின்றன.கஸ்தூர்பா காந்தி நெஞ்சுருக வைக்கிறார். கணித மேதை ராமானுஜனும், முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியும் முட்டி, முளைத்து மேலே வந்தது இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஊற்று. செக்கிழுத்துவிட்டு வெளியே வந்த பிறகு 24 ஆண்டுகள் வ.உ.சியை இந்த நாடு நடத்திய விதத்தையும், தாழ்த்தப்பட்டோருக்கு தனி தொகுதி வாங்கித்தந்த அம்பேத்கரை சொந்த மக்களே திரும்பத்திரும்ப தோற்கடித்ததையும் படிக்கும் போது கோபம் கொப்பளிக்கிறது. புத்தகத்தின் பல இடங்கள் அதிர வைக்கின்றன. அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாதபடிக்கு மனத்தைக் கனக்க வைக்கின்றன. திரிபும், பக்கச்சார்பும் இல்லாமல், சுவாரசியமாகவும், துணிச்சலாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, உண்மையான வரலாற்றினைத் தெரிந்து கொள்ள நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புதையல்.

Delivery: 1 week
₹180.00
வகை: பொது அறிவு

ஆண்டு 2018
பக்கங்கள் 352
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் பொது அறிவு
மொழி தமிழ்
ISBN No "978-81-936633-4-9
கோமல் அன்பரசன்

தமிழின் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவரான கோமல் அன்பரசன், எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கி வருபவர். அரசியல், வரலாறு, வாழ்வியல், ஊடகவியல் துறைகளில் 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். தமிழின் முன்னணி பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.       எழுத்துக்காக, ஊடகப்பணிக்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருதுகளைப் பெற்றிருப்பவர்.
’ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத் துடன்        ’காவிரி’        எனும் அமைப்பை உருவாக்கி டெல்டா மாவட்டங்களில் கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் மகளிர் & மாணவர் மேம்பாடு உள்ளிட்ட தளங்களில் பணியாற்றுபவர். சொந்த ஊரான மயிலாடுதுறையின் (மாயூரம்) உயர்வுக்காக ’மாயூர யுத்தம்’ எனும் இயக்கத்தின் மூலம் பாடுபட்டு வருபவர். படிக்க வசதியில்லாத கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கு 100% உதவித்தொகையுடன், வாழ்வியல் பயிற்சிகளையும் அளித்து வம் சென்னை ’ஆனந்தம்’ அமைப்பின் அறங்காவலர்.
காவிரிக்கரையில் மயிலாடுதுறைக்குப் பக்கத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்த இவர், விவசாயத்திலும் மரம் வளர்ப்பிலும் ஆர்வமுள்ளவர். ’வாழ்ந்து, வாழ்வித்தல் வல்லமை’ என்ற தனித்துவமான வாழ்வியல் கோட்பாட்டை வகுத்துக் கொண்டு அதன் படி இயங்கிவரும் கோமல் அன்பரசனுக்குப் பக்கபலமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.
தினத்தந்தியில் தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ’ரகசியமான ரகசியங்கள்’ இவரது முக்கியமான வரலாற்று ஆய்வுகளில் ஒன்று. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தின் காலடியில் மறைந்து கிடந்த ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் தந்திருக்கிறார். பல இடங்கள் படிப்பவர்களை அதிர வைக்கும்; ஆடிப்போகச் செய்யும். அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாதபடிக்கு மனத்தைக் கனக்க வைக்கும். ’வரலாற்றுப் பாட நூல்கள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் எல்லாருக்கும் வரலாற்றைப் பிடித்துப் போய்விடுமே’ என்று சொல்ல வைக்கும்.

Daily Thanthi Publication
- 11/18/2018 12:37 PM
Ennoda mail id accept panna mattuthu buying process easy ah aakunga
- 10/16/2018 9:42 AM
பாதுகாக்க பட வேண்டிய புத்தகம் .
*
*
*