Thanthi Publications. Product Reviews. பழைய சோறு. Palaya Soru
 

பழைய சோறு

No reviews

உலகின் தலைசிறந்த காலை உணவு பற்றிய முதல் தமிழ் புத்தகம்!

 புதிய கோணம், புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரசியம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன்  எழுத்தில்  ‘பழைய சோறு’ நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு -  உணவு என்பதைத் தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு. அத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றை எல்லாம் தன் சொக்க வைக்கும் நடையில்  கவளம், கவளமாக உருட்டி தாயன்போடு நம் கைகளில் தருகிறார் கோமல்.

தமிழின் பொக்கிஷங்களில் ஒன்றான ‘பதார்த்த குண சிந்தாமணி’ போன்ற பழம்பெரும் மருத்துவ நூல்களில் இருந்து மட்டுமல்ல; அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி அமெரிக்கா வரை பழைய சோறு குறித்து நடந்த ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி இந்நூல் தரும் தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருப்பதால் படிப்பவருக்குப் பழைய சோறு மிகவும் நெருக்கமாகிவிடுகிறது. அழகாக ஜொலிப்பதற்கும், ஆண்மை அதிகரிப்பதற்கும் கூட இதில் அற்புதமான வழிகள் இருப்பது விழிகளை விரிய வைக்கிறது.

சாதம் என்றால் சர்க்கரை வியாதி என்று மருத்துவர்கள் கிளப்பும் பீதி குறித்த பின்னணி இந்நூலில் உடைக்கப்பட்டிருக்கிறது. “பர்கர், பிட்ஸா மாயத்திலிருந்து நம் சந்ததிகளைப் பழையமுதை நோக்கித் திருப்ப எடுக்கப்பட்டுள்ள முக்கியமான முயற்சி இப்புத்தகம்” என்று அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.

          பழைய சோறு பற்றி மட்டும் பேசாமல், அதன் குணாதிசயங்களில் இருந்து வாழ்வை முழுமையாக வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டியதை மாறுபட்ட கோணத்தில் பேசுவது இந்நூலின் முக்கியமான சிறப்பு. தமிழுக்கு இப்படியோர் உத்தி ரொம்பவும் புதிதானது. மொத்தத்தில் கோமல் அன்பரசன் எழுதியிருக்கும் ‘பழைய சோறு’  உடல் சார்ந்த நலவியல் புத்தகம் மட்டுமல்ல; படித்து முடித்தவுடன்  மனசுக்கும் புத்துணர்வைத் தரும் அற்புதம்! ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்க வேண்டிய  பெருமிதம் இந்த நூல்.

Delivery: 3-5 days
₹70.00
வகை: வரலாறு

ஆண்டு 2019
பக்கங்கள் 80
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் வரலாறு
மொழி தமிழ்
ISBN No 9788193938072
கோமல் அன்பரசன்

தமிழின் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவரான கோமல் அன்பரசன், எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கி வருபவர். அரசியல், வரலாறு, வாழ்வியல், ஊடகவியல் துறைகளில் 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். தமிழின் முன்னணி பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.       எழுத்துக்காக, ஊடகப்பணிக்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருதுகளைப் பெற்றிருப்பவர்.
’ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத் துடன்        ’காவிரி’        எனும் அமைப்பை உருவாக்கி டெல்டா மாவட்டங்களில் கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் மகளிர் & மாணவர் மேம்பாடு உள்ளிட்ட தளங்களில் பணியாற்றுபவர். சொந்த ஊரான மயிலாடுதுறையின் (மாயூரம்) உயர்வுக்காக ’மாயூர யுத்தம்’ எனும் இயக்கத்தின் மூலம் பாடுபட்டு வருபவர். படிக்க வசதியில்லாத கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கு 100% உதவித்தொகையுடன், வாழ்வியல் பயிற்சிகளையும் அளித்து வம் சென்னை ’ஆனந்தம்’ அமைப்பின் அறங்காவலர்.
காவிரிக்கரையில் மயிலாடுதுறைக்குப் பக்கத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்த இவர், விவசாயத்திலும் மரம் வளர்ப்பிலும் ஆர்வமுள்ளவர். ’வாழ்ந்து, வாழ்வித்தல் வல்லமை’ என்ற தனித்துவமான வாழ்வியல் கோட்பாட்டை வகுத்துக் கொண்டு அதன் படி இயங்கிவரும் கோமல் அன்பரசனுக்குப் பக்கபலமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.
தினத்தந்தியில் தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ’ரகசியமான ரகசியங்கள்’ இவரது முக்கியமான வரலாற்று ஆய்வுகளில் ஒன்று. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தின் காலடியில் மறைந்து கிடந்த ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் தந்திருக்கிறார். பல இடங்கள் படிப்பவர்களை அதிர வைக்கும்; ஆடிப்போகச் செய்யும். அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாதபடிக்கு மனத்தைக் கனக்க வைக்கும். ’வரலாற்றுப் பாட நூல்கள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் எல்லாருக்கும் வரலாற்றைப் பிடித்துப் போய்விடுமே’ என்று சொல்ல வைக்கும்.

Daily Thanthi Publication
*
*
*