Thanthi Publications. Product Reviews. நீங்களும் தலைவர் ஆகலாம். Neengalum Thalavar Aagalam
 

நீங்களும் தலைவர் ஆகலாம்

5.0 1

ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு சில அடிப்படை பண்புகள் அவசியமாகிறது.

திட்டமிடுதல், தகவல் தொடர்பைச் சரியான முறையில் கையாளுதல், சிறந்த நேர நிர்வாகம், குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் போன்ற முக்கிய குணங்களெல்லாம் செயல் வெற்றிக்கு அடிப்படையாகிறது.

இந்தக் குணங்களை ஒருவர் பெற்றிருந்தால் தானாகவே தலைவராகி விடுகிறார்.
தலைமைப் பதவி என்பது ஒரு சிலருக்கே கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக அந்த எண்ணத்தை மாற்றி, "நானும் தலைவர் ஆவேன்" என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதை இந்த நூலில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் விரிவாக விளக்கியுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இளமைப் பருவத்தில் அதிக கவனத்துடன் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டால் எல்லோரும் எளிதில் தலைவராகலாம் என்பதை இந்த நூலில் அவர் தெளிவாக கூறியுள்ளார்.

₹80.00
வகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்

ஆண்டு 2019
பக்கங்கள் 112
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் தன்னம்பிக்கை
மொழி தமிழ்
ISBN No 978-81-939380-0-3
நெல்லை கவிநேசன்

நெல்லை கவிநேசன் (எஸ்.நாராயணராஜன்), திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுமார் 29 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது வணிக நிர்வாக இயல்துறையின் தலைவர். விளம்பரம் பற்றி ஆய்வு செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, இளைஞர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார். பல்வேறு வார, மாத மற்றும் நாளிதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் எழுதி எழுத்துத்துறையில் முத்திரை பதித்தவர். மேலும் ஆல் இந்திய ரேடியோ, ஹலோ எஃப்.எம். போன்ற வானொலிகளிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கியுள்ளார். கல்வி, ஆன்மிகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தொழில், வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறைகளில் 40&க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 

Daily Thanthi Publication
- 9/3/2019 3:54 AM
தாங்கள் புத்தகம் ஒன்று பயின்றேன் நல்ல கருத்தாக
நன்றி!
வாழ்க! வளமுடன்!!
குறிப்பு:
உங்களை போன்ற கவியின்
அறிந்து பலரருக்கு உபயமாக
இருக்க! தேவையான உங்கள்
உதவி தேவை ஐயா!
*
*
*