Thanthi Publications. Product Reviews. நதிபோல ஓடிக்கொண்டிரு. Nathipola Odikondiru-978-81-939380-2-7
 

நதிபோல ஓடிக்கொண்டிரு

No reviews

தன்னிடம் உள்ள அளப்பரிய ஆற்றலை உணர முடியாமல், சமூக வலை தளங்கள், ஊடகங்கள், மேற்கத்திய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இன்றைய இளைஞர்களைத் திசை திருப்புகின்றன. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நூலை பேராசிரியர் முனைவர் இரா.காயத்ரி படைத்துள்ளார்.


"சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே!
இந்த உலகத்தைச் சுமக்கும் பூமியே
உன் காலடியில்தான்"
"நீ விழுந்தபோதெல்லாம்
தாங்கிப் பிடித்த கை;
நீ மனம் உடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும் கை;
தனியே நீ அழும்போதெல்லாம்
உன் கண்ணீரைத் துடைக்கும் கை;
அது வேறு யாருடைய கையும் அல்ல.
உன்னுள்ளே உள்ள உன் தன்னம்பிக்கை"


என்பன போன்ற வரிகள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் அருமருந்து.

"தடைகளை உடைப்போம், புதிய சரித்திரம் படைப்போம்" என இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டும் நூல்.

₹100.00
வகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்

ஆண்டு 2019
பக்கங்கள் 112
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் தன்னம்பிக்கை
மொழி தமிழ்
ISBN No 978-81-939380-2-7
முனைவர்.இரா.காயத்ரி

இரா.காயத்ரி, நூலாசிரியர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊரில் பிறந்து சென்னையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னுடைய எழுத்து, பேச்சு மற்றும் தன் செயல்கள் மூலம் இளைய சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை கருத்துக்களை சொல்பவர்.

தொலைக்காட்சி மூலமாகவும், நேரிடையாகவும் கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கல்வி, அரசியல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றிய தன்னுடைய கருத்துக்களை ஒரு சமூக ஆர்வலராக சமூக ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பதிவு செய்து வருகிறார்.

91-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 13 முனைவர்களையும் உருவாக்கியவர். இளம் கல்வியாளர் விருது, கோல்டன் குரு உட்பட 8 விருதுகளை பெற்றவர்.

Daily Thanthi Publication
*
*
*