Thanthi Publications. Product Reviews. நமக்குள் சில கேள்விகள். Nammakul Sila Kelvigal
 

நமக்குள் சில கேள்விகள்

5.0 1

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வார, மாத இதழ்களில் கேள்வி-பதில் பகுதி இடம் பெறுகிறது. அந்த இதழின் ஆசிரியரோ அல்லது பிரபலமானவர்களோ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். இது வாசகர்களின் சிந்தை கவர்ந்த பகுதியாகவே திகழ்ந்து வருகிறது.
பெரும்பாலும் வாசகர்கள் கேள்வி கேட்டு அதற்குப் பதில் அளிக்கும் முறையே வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ.இறையன்பு, கேள்விகளை தானே உருவாக்கி அதற்குத் தக்க பதில்களை அளித்து வந்தார். "ராணி" வார இதழில் 100 வாரங்கள் தனது கேள்விகளால் வேள்வி நடத்தினார். அதில் ஒரு பகுதி "கேள்வியும் நானே பதிலும் நானே" என்ற தலைப்பில் புத்தகமாக வெளி வந்தது. இதன் மீதிப் பகுதி "நமக்குள் சில கேள்விகள்" என்ற தலைப்பில் இப்போது புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், வாழ்வியல் சிந்தனைகள், நேர மேலாண்மை, மருத்துவம், ஆன்மிகம், வரலாறு, அறிவியல் என பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதில் அளித்துள்ளார். அறிவுத் தாகத்தைத் தணிக்கும் கருத்துகள் கொண்டது இந்நூல்.

Delivery: 3-5 days
₹160.00
வகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்

ஆண்டு 2019
பக்கங்கள் 224
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் தன்னம்பிக்கை
மொழி தமிழ்
ISBN No 978-81-939380-8-9
வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

‘தினத்தந்தி’ நாளிதழை ஏழு வயதிலிருந்தே நான் படித்து வருகிறேன் என்றாலும், அது இதழ் அல்ல; இயக்கம்; தாளல்ல; ஆவணம் என்பதை நான் இத்தொடர் மூலம் உணர்ந்தேன். ஆட்சியாளர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் படிக்கிற செய்தித்தாள் இது என்பது எதிர்வினைகளால் எனக்குப் புரிந்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலாய் மறையாமல், கருத்தைக் கவரும் நிலவாய் இந்த செய்தித்தாள் நீடிப்பதன் ரகசியம் எனக்கு பிடிபட்டது. என் மாலையில் வராத பல மலர்கள் இன்னும் தோட்டத்திலேயே சிரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விதையை பல இடங்களில் தூவினேன். ‘தினத்தந்தி’ என்ற வயலில்தான் இது அறுவடையானது. இதை வாசித்த வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். வெ. இறையன்பு

Daily Thanthi Publication
- 8/27/2019 9:13 AM
சூப்பர் book
*
*
*