Thanthi Publications. Product Reviews. கேள்வியும் நானே... பதிலும் நானே.... Kelvium Nane... Pathilum Nane...9788193580677
 

கேள்வியும் நானே... பதிலும் நானே...

No reviews

ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய கேள்விகளை எழுப்பி, அதற்கான விடையைக் கண்டுபிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல வார, மாத இதழ்களில் கேள்வி & பதில் பகுதி என்பது சிறப்பு மிக்க அங்கமாகவே பங்கு பெறுகிறது.


வாசகர்களிடம் இருந்து கேள்வியைப் பெற்று பதில் அளிக்கும் முறைதான் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ.இறையன்பு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அவரே கேள்வி கேட்டு அவரே பதில் அளித்தார். கேள்விகளால் ஒரு அறிவு வேள்வியை நடத்தினார்.


இது ராணியில் வெளியானபோதே வாசகர்களின் வரவேற்பையும், பலமான பாராட்டுகளையும் பெற்றது. இந்த முயற்சியில் அவர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.


இந்த கேள்வி & பதில் பகுதி வாசகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது. மாணவர்கள் மனதில் தெளிவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. புதிய தகவல்களையும், விளக்கங்களையும் எடுத்துக்கூறி அறிவை மிளிரச் செய்கிறது.

₹180.00
வகை: பொது அறிவு

ஆண்டு 2017
பக்கங்கள் 240
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் பொது அறிவு
மொழி தமிழ்
ISBN No 9788193580677
வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

‘தினத்தந்தி’ நாளிதழை ஏழு வயதிலிருந்தே நான் படித்து வருகிறேன் என்றாலும், அது இதழ் அல்ல; இயக்கம்; தாளல்ல; ஆவணம் என்பதை நான் இத்தொடர் மூலம் உணர்ந்தேன். ஆட்சியாளர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் படிக்கிற செய்தித்தாள் இது என்பது எதிர்வினைகளால் எனக்குப் புரிந்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலாய் மறையாமல், கருத்தைக் கவரும் நிலவாய் இந்த செய்தித்தாள் நீடிப்பதன் ரகசியம் எனக்கு பிடிபட்டது. என் மாலையில் வராத பல மலர்கள் இன்னும் தோட்டத்திலேயே சிரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விதையை பல இடங்களில் தூவினேன். ‘தினத்தந்தி’ என்ற வயலில்தான் இது அறுவடையானது. இதை வாசித்த வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். வெ. இறையன்பு

Daily Thanthi Publications
*
*
*