Thanthi Publications. Product Reviews. கல்லிலே கலைவண்ணம்: அதிசயக் கோவில் அங்கோா்வாட். Kallile Kalaivannam: Athisaya Kovil Ankgorwat
 

கல்லிலே கலைவண்ணம்: அதிசயக் கோவில் அங்கோா்வாட்

No reviews

கம்போடியா நாட்டில் தமிழர்களின் தாக்கத்தால் உருவான "அங்கோா்வாட்" கோயிலின் முழுமையான வரலாறு. அாிய தகவல்கள்! அற்புதமான படங்கள்.

தமிழகத்தில் இருந்து 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போடியாவுக்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சென்று, அங்கு மன்னர் ஆட்சி முறையைத் தொடங்கி வைத்த வரலாறு இந்த நூலில் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. காஞ்சீபுரத்தில் இருந்து சென்ற தமிழர் கம்போடியாவில் புதிய பரம்பரை உருவாகக் காரணமாக இருந்தார் என்ற ஆச்சரியமான தகவலையும், உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமை பெற்ற அங்கோர் வாட் கோவில் கட்டப்படுவதற்கு, காஞ்சீபுரத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் கோவிலே வழிகாட்டியாக இருந்தது என்ற அதிசயமான செய்தியையும், இந்த நூல் எடுத்து வைத்து பிரமிப்பூட்டுகிறது. அங்கோர் வாட் ஆலயத்தைக் கட்டிய மன்னரின் வரலாறு, அந்தக் கோவில் கட்டப்பட்டது எப்படி, அதில் மறைந்து கிடக்கும் அதிசயங்கள் என்ன என்பவை, பரபரப்பான நாவலைப் படிக்கும் வகையில் தரப்பட்டு இருக்கின்றன. கம்போடியாவில் 4,500-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் இருக்கின்றன என்ற வியப்பான தகவலைக் கூறும் இந்த நூல், அங்குள்ள புகழ்பெற்ற பல கோவில்களைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் விளக்கமாகவும் அரிய படங்களுடனும் தந்து இருக்கிறது. அதிக செலவு இல்லாமல் கம்போடியா சென்று வருவது எப்படி என்ற தகவலையும் கொடுத்து இருப்பது சிறப்பு. தமிழர்களுக்கும் கம்போடியாவுக்கும் உள்ள தொடர்பை முழுமையாகவும், ஆதாரங்களுடனும் தந்து இருக்கும் முதல் தமிழ் நூல் இது தான் என்ற பெருமையை இந்த நூல் பெற்று இருக்கிறது.

Delivery: 3-5 days
₹150.00
வகை: வரலாறு

ஆண்டு 2020
பக்கங்கள் 272
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் வரலாறு
மொழி தமிழ்
ISBN No 9789389595031
அமுதன்

மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம். தனசேகரன். 'தினத்தந்தி' செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.  அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை, 'கலாம் ஒரு சரித்திரம்' என்ற பெயரிலும், தஞ்சைப் பெரிய கோவில் பற்றி 'ஆயிரம் ஆண்டு அதிசயம்' என்ற பெயரிலும், எகிப்தின் பிரமிப்பூட்டும் பிரமிடுகள் பற்றி 'புதையல் ரகசியம்' என்ற பெயரிலும், இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் விஞ்ஞானம் உள்பட பல துறைகளில் நிறைந்த அறிவு பெற்று இருந்தார்களா என்பது குறித்து, 'பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்' என்ற பெயரிலும், இவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Daily Thanthi Publication
*
*
*