Thanthi Publications. Product Reviews. இதுவும் கடந்து போகும். Ithuvum Kadanthu Pogum
 

இதுவும் கடந்து போகும்

No reviews

பிறப்பு முதல் இறப்பு வரை கவலையின்றி வாழ்வதற்கான வழிகாட்டி :

மனிதர்களான நாம் ஒவ்வொருவரும் எதற்காக பிறந்திருக்கிறோம், இ்ந்த பிறப்பின் மூலம் நாம் எதை எல்லாம் செய்யப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எவ்வளவு காலம் - எப்படி வாழ்வீர்கள் என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியுமா? ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ படைக்கப்பட்ட நீங்கள் மகிழ்ச்சியின்றி, மனநிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க என்ன காரணம்? அத்தனைக்கும் இந்த புத்தகத்தில் விடை இருக்கிறது.

புன்னகை முகமாய் வாழ வேண்டிய உங்களை தினமும் புலம்பலோடு வாழவைப்பது எது என்பது உங்களுக்கே தெரியும். தொடர் தோல்வி, நஷ்டம், தீராத மனக்கவலை, தாங்க முடியாத அவமானம், உறவுச்சிக்கல்கள், துரோகங்கள், நோய், முதுமை, மரண பயம் போன்ற ஏதாவது ஒன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அதனால் எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாமல் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.
இப்படிப்பட்ட எந்த பயமும், கவலையும், கண்ணீரும் இன்றி நிம்மதியாக, மனநிறைவோடு, தைரியமாக உங்களால் வாழ முடியுமா?

நிச்சயம் முடியும்! அதற்கான அத்தனை வழிமுறைகளையும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பால்சுயம்பு இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார். இதன் மூலம் இன்றைய வாழ்க்கையில் இருக்கும் பயம், பதற்றம், கவலைகள் நீங்கி தெளிவும், மனதைரியமும் பிறக்கும். எதுவந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனோசக்தி அதிகரிக்கும். இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒருவகையில் ஒத்துப்போகும். உங்கள் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் கிடைக்கும். அதனால் உங்களை மீண்டும் மீண்டும் இந்த புத்தகம் படிக்கத்தூண்டும்.

₹150.00
வகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம், ஆன்மிகம்

ஆண்டு 2019
பக்கங்கள் 192
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் தன்னம்பிக்கை
மொழி தமிழ்
ISBN No 978-81-939380-7-2
பால் சுயம்பு

பெயர் : பால் சுயம்பு
கல்வி : எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (இதழியல்)
பணி : துணை ஆசிரியர், தினத்தந்தி, சென்னை.
தினத்தந்தியில்
பணி அனுபவம் : 31 ஆண்டுகள்
பெற்றோர் : பால் நாடார் - சொர்ணம்.
பிறந்த ஊர் : நாகர்கோவில், கோட்டாறு.
முதல் சிறுகதை : சு..ம...தீ... (1983).
முதல் தொடர்கதை : உறவே நீ உறங்காதே (தினத்தந்தி நாளிதழில் -1992).
முதல் கட்டுரைத் தொடர் : திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்.. அதிர்ச்சிகள்..  (தினத்தந்தி ஞாயிறுமலரில் - 2008) 
படைப்புகள் : ஆயிரத்தைக் கடந்து...
சிறந்த படைப்புகளுக்காக பெற்ற பரிசுகள் : ‘பாரத ஸ்டேட் பேங்க்’ ரொக்கப் பரிசு - இருமுறை, அனந்தசாரி அறக்கட்டளை - ரொக்க பரிசு கோவை அழ. வள்ளியப்பா இலக்கிய வட்ட விருது மற்றும்...

Daily Thanthi Publication
*
*
*