Thanthi Publications. Product Reviews. சினிமாவின் மறுபக்கம் பாகம்-2. Cinemavin Marupakkam Part-2
 

சினிமாவின் மறுபக்கம் பாகம்-2

No reviews

சினிமா உலகில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை புரிந்தவர் ஆரூர்தாஸ். திரை உலகில் நீண்ட காலம் இருந்ததால், அவர் பழகாத நடிகர், நடிகைகள் இல்லையென்றே கூறலாம்.

அவரது திரை உலகப் பயணத்தையும், அவர் சந்தித்த சினிமா பிரமுகர்கள் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையும், ‘சினிமாவின் மறுபக்கம்’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் தொடர் கட்டுரை எழுதினார்.

அதில் 44 அத்தியாயங்களுடன் முதல் பாகம் வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இப்போது 41 அத்தியாயங்களுடன் விழிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் ‘சினிமாவின் மறுபக்கம் பாகம்-2’ வெளியாகி உள்ளது.

தீபாவளியன்று எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் இடையே நடந்த படப்போட்டி; சிவாஜியின் கோபமும், சமாதானமும்; கே.ஆர்.விஜயாவின் சினிமா அறிமுகம்; சாவித்திரி சந்தித்த சோதனைகள் என்பன போன்ற எண்ணற்ற சம்பவங்களைச் சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.

சாதனை படைத்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், வாகினி பி.நாகிரெட்டி, கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோரிடம் பழகிய அனுபவங்களை அழகிய முறையில் விவரிக்கிறார். மொத்தத்தில் சினிமா ரசிகர்களுக்கு சுவையான விருந்து.

Delivery: 1 week
₹250.00
வகை: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை

ஆண்டு 2018
பக்கங்கள் 416
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் சினிமா
மொழி தமிழ்
ISBN No 978-81-936633-8-7
ஆரூர்தாஸ்

1,000 படங்களுக்கு வசனம் எழுதியவர்... வசனம் எழுதுவதில் அரிய சாதனை படைத்தவர், ஆரூர்தாஸ். டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுபவராக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஆரூர்தாஸ், 1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதியுள்ளார். இது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனை. திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் ஒரே சமயத்தில் வசனம் எழுதியது இன்னொரு சாதனை. சிவாஜிக்கு இவர் வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை 28. எம்.ஜி.ஆருக்கு எழுதிய படங்கள் 21. திரை உலகில் நீண்ட காலம் பவனி வந்ததால், இவர் பழகாத நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் அநேகமாக எவரும் இல்லை. கற்பனையான சினிமா கதைகளைவிட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர், தன் திரை உலகப் பயணத்தை மட்டுமல்ல, சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

Daily Thanthi Publication
*
*
*