Thanthi Publications. Product Reviews. அதிசயங்களின் ரகசியங்கள். Athisayangalin Rahasiyangal-9788193129593
 

அதிசயங்களின் ரகசியங்கள்

No reviews

     உலகில் இறைவன் படைத்த அதிசயங்கள் ஒருவகை; மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் இன்னொரு வகை. உலக அதிசயங்கள் குறித்தும், அதில் புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் பற்றியும் எழுத்தாளரும், பொறியாளருமான நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி முத்துச்சரம் பகுதியில், "அதிசயங்களின் ரகசியங்கள்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார்.

    பல சுவாரஸ்யமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொடர், வாசகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றது. தொடராக வந்ததைக் காட்டிலும் இன்னும் பல புதிய செய்திகளையும், ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை மேலும் விரிவாக்கியும் வண்ணப்படங்களுடன் தினத்தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

     தொடக்கத்தில் கிசாவில் உள்ள பிரமிடுகள், பாபிலோனிய பெருஞ்சுவர் மற்றும் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் சோயுஸ் சிலை, ஆர்டமிஸ் ஆலயம், கொலோசஸ், அலெக்சாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம், மவுசோலியம் ஆகிய 7 இடங்களே உலக அதிசயங்களாகக் கருதப்பட்டன. அதிசயங்கள் மாறிக்கொண்டு போவது ஒன்றும் அதிசயமல்ல. அந்த வகையில் உலக அதிசயங்கள் மாறின. உலக அதிசயம் பற்றிய பட்டியலை வெளியிட 2006-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிச்சன் இட்சா பிரமிடுகள் (மெக்சிகோ) மீட்பர் கிறிஸ்து சிலை (பிரேசில்), தாஜ்மகால் (இந்தியா), கொலோசியம் (ரோம்), சீனப்பெருஞ்சுவர் (சீனா), மச்சு பிச்சு (பெரு), பெட்ரா (ஜோர்தான்) ஆகியன அறிவிக்கப்பட்டன.

     இத்தகைய உலக அதிசயங்கள் குறித்து விரிவாகவும், ஆளிணிவியல் அடிப்படையிலும் ஆசிரியர் இந்த நூலில் அழகுற விளக்கியுள்ளார். மேலும் இவை தவிர இன்னும் சில அதிசயங்கள், இந்தியாவின் சில அதிசயங்கள், தமிழகத்தின் அதிசயங்கள், உலகின் தொழில்திறன் அதிசயங்கள், உலகின் இயற்கை அதிசயங்கள் மற்றும் அதிசயங்களை விஞ்சிய பேரதிசயங்கள் என்னும் தலைப்புகளில் அதிசயங்கள் குறித்து நாம் அறியாத பல செய்திகளை எழுதியுள்ளார். வரலாற்று ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் இந்நூல் நிச்சயம் கவரும்.

Availability: Out of stock
Delivery: 3-5 days
₹160.00
வகை: பொது அறிவு

ஆண்டு 2016
பக்கங்கள் 192
பதிப்பு முதல்
பொருள் பொது அறிவு
மொழி தமிழ்
ISBN No 9788193129593
நெய்வேலி பாரதிக்குமார்

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்பொழுது நெய்வேலியில் வசித்து வரும் நெய்வேலி பாரதிக்குமார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துணை முதன்மைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, பிறமொழித் திரைப்பட விமர்சனங்கள் என எழுத்தின் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் இவர் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் வசனம் எழுதிய "மன்னார் வளைகுடா" திரைப்படமும் அடங்கும். ஒரு ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது சிறுகதை, பொதிகைத் தொலைக்காட்சியில் நாடகமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், எடிசனின் வாழ்க்கை வரலாறு, 'பழம்' பெருமை பேசுவோம் என்கிற கட்டுரைத் தொகுப்பு ஆகிய ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. தினத்தந்தி நாளிதழில் சனிக்கிழமைதோறும் வெளிவரும் 'முத்துச்சரம்' பகுதியில் தொடராக வெளிவந்த ''அதிசயங்களின் ரகசியங்கள்'' சுவாரசியமான பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி வாசகர்களின் வரவேற்பை பெற்றது. தொடராக வந்ததைக் காட்டிலும் இன்னும் பல புதிய செய்திகளையும், ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை இன்னும் விரிவாக்கி, அழகுற இணைத்தும் வண்ணப்படங்களுடன் நூலாக வெளிவந்துள்ளது. ''அறிவை விரிவு செய், அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை...” என்கிற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, நாளும் புதிய செய்திகளை தேடித் திளைப்பவர்களுக்கும், வரலாற்றின் மீது தீராத தாகம் கொண்டவர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

Daily Thanthi Publication
*
*
*