Thanthi Publications. Product Reviews. ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம். athichanallur-keeladi-man-moodiya-magathana-nagarirgam
 

ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம்

4.0 3

ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே பரவியது என்பதற்கும் ஆதாரமாக இருப்பது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடந்த அகழாய்வுகளே. அதை ஆய்வு கண்ணோட்டத்தில் "தோண்டி" எடுத்து தமிழ் இனத்தின் பெருமையை இந்த நூலில் ஆசிரியர் அமுதன் பறைசாற்றி இருக்கிறார்.

ஒரு பல்கலைக் கழகம் குழு அமைத்து ஆற்ற வேண்டிய பெரும் பணியை தனி மனிதராக ஆற்றி இருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமே என்பதை இந்தநூலின் ஒவ்வொரு பக்கமும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.


தினத்தந்தி ஞாயிறு மலரில் 49 வாரங்கள் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பை பெற்ற தொடர். இப்போது அழகிய வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது.


"இந்த நூலை அறிவுலகம் மகிழ்ந்து பார்க்கும்; ஆராய்ச்சி உலகம் வியந்து பார்க்கும். ஒரு தவத்தைப்போல இந்தத் திருப்பணியை மேற்கொண்ட ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்த அரிய நூலை அழகுறத் தந்த தினத்தந்திக்கு என் வாழ்நாள் வணக்கம். என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

Delivery: 1 week
₹180.00
வகை: பழந்தமிழ் இலக்கியம் - தொல்லியல்

ஆண்டு 2017
பக்கங்கள் 272
பதிப்பு மூன்றாம்
பொருள் நாகாிகம்
மொழி தமிழ்
ISBN No 9788193298671
அமுதன்

மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம். தனசேகரன். 'தினத்தந்தி' செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.  அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை, 'கலாம் ஒரு சரித்திரம்' என்ற பெயரிலும், தஞ்சைப் பெரிய கோவில் பற்றி 'ஆயிரம் ஆண்டு அதிசயம்' என்ற பெயரிலும், எகிப்தின் பிரமிப்பூட்டும் பிரமிடுகள் பற்றி 'புதையல் ரகசியம்' என்ற பெயரிலும், இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் விஞ்ஞானம் உள்பட பல துறைகளில் நிறைந்த அறிவு பெற்று இருந்தார்களா என்பது குறித்து, 'பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்' என்ற பெயரிலும், இவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Daily Thanthi Publication
- 1/25/2018 7:08 PM
எனது சொந்த ஊர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. வருடம் இரண்டு முறை என் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி திருச்செந்தூருக்கு காரில் செல்வோம். சில வருடங்களுக்கு முன், அவ்வாறு செல்கையில், முதுமக்கள் தாழி என்று குறிப்பிட்ட ஒரு வளைவைக் கண்டேன். பின் அதை மறந்துவிட்டேன். கீழடி பற்றிய செய்தி  வெளியான போது ஆதிச்சநல்லூர் பற்றி குறிப்பிட்டனர்.

ஆதிச்சநல்லூர் பற்றி Google Mapsல் தேடிய பொழுது, அந்த ஊர் நாங்கள் செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். எனது அண்ணனிடம், அந்த இடத்திற்கு ஒரு முறை செல்வோம் என்று கூறினேன்.

ஆதிச்சநல்லூர் என்பது 114 ஏக்கர் மயான பூமி. இந்த ஒரு வரி போதும் பரபரப்பை ஏற்படுத்த.

சிறிது நாட்களுக்கு முன் நடந்த புத்தக் கண்காட்சியில், இந்த புத்தகத்தை வாங்கினேன். எனது அம்மாவின் சொந்த ஊரான தேரிக்காடு பற்றியும் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, உணவு சாப்பிடும் சமயம், என் அம்மா பல கதைகளைக் கூறுவார். வயதான முதியவர்கள் தங்களது இறுதி நாட்களில் பெரிய மண் பானைக்குள் வைக்கப்படுவர், புதையல், மாய வித்தைகள், சாபங்கள் என்று தன் ஊரில் நடந்ததாகத் தான் சிறு வயதில் கேள்விப்பட்டவைகளைக் கூறுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவற்றை தொடர்புபடுத்த முடிகிறது. கிருஷ்ணாபுரம், கொற்கை, குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்களும் புத்தகத்தில் இடம் பெறுகின்றன.

Googleல் தேடிய பொழுது அலெக்சாண்டர் ரீயா எழுதிய Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair  (https://ia600201.us.archive.org/30/items/catalogueofprehi00reaauoft/catalogueofprehi00reaauoft.pdf) புத்தகம் கிடைத்தது. அலெக்சாண்டர் ரீயா கண்டெடுத்தவைகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் உள்ள பொக்கிஷங்களை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். எகிப்தில் இருக்கும் மம்மிகளைக் கண்டு வியந்துள்ளேன். ஆதிச்சநல்லூர் அதைவிட பிரம்மாண்டமானது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது வீட்டில் உள்ள  அனைவரையும் இந்த புத்தகத்தைப் படிக்கும்படி கூறியுள்ளேன்.
- 8/6/2017 8:00 AM
தினதந்தியில் வார தொடராக வந்தபோது தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் தீர்த்துள்ளது.
- 6/12/2017 7:29 AM
நைஸ் புக்.
*
*
*