Thanthi Publications. Product Reviews. அருள்தரும் அதிசய சித்தர்கள். Arultharum Athisaya Sithargal
 

அருள்தரும் அதிசய சித்தர்கள்

No reviews

சித்தி பெற்றவர்கள் சித்தர்கள். மானிட வாழ்வியலுக்கு வளம் சேர்த்தவர்கள். சித்தர்கள், சிவத்தினை அகக் கண்ணால் கண்டவர்கள். அறிவார்ந்த சக்தி கொண்டவர்கள்.

அத்தகைய சித்தர்கள் வரிசையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிசய சித்தர்களைப் பட்டியலிட்டு, அவர்கள் ஆற்றிய அருட்பெரும் பணிகளையும், சேவைகளையும், மக்களுக்கு செய்த சித்துக்களையும் இந்த நூலில் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு அழகிய முறையில் எழுதியுள்ளார்.

இறந்தவர் உயிரை மீட்ட மவுனசாமி, மழை பொழிய வைத்த பேப்பர் சுவாமி, பூமிக்கு அடியில் தவம் செய்த செண்பக சாது, ஈசனின் உத்தரவால் நோய் தீர்த்த சங்கு சுவாமி போன்ற பல அபூர்வ சித்தர்களின் செயல்பாடுகளையும், பெருமைகளையும், அவர்கள் அடக்கமாகி இருக்கும் கோவில்களின் சிறப்புகளையும் இந்த நூலில் காணலாம்.

₹160.00
வகை: ஆன்மிகம்

ஆண்டு 2019
பக்கங்கள் 192
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் ஆன்மிகம்
மொழி தமிழ்
ISBN No 978-81-939380-4-1
முத்தாலஞ்குறிச்சி காமராசு

முத்தாலங்குறிச்சி காமராசு 1987-ல் மதுரை தினத்தந்தியில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்து படிப்படியாக எழுத்தாளராக உயர்ந்தவர். இதுவரை 3ஆயிரத்துக்கு மேற்பட்ட படைப்புகளை பல்வேறு ஊடகத்தில் எழுதியுள்ளார். 50 நூல்களையும் படைத்துள்ளார். தாமிரபரணியை பற்றி மிகஅதிகமான நூலை எழுதியவர்.
மேற்கு தொடர்ச்சி மலை பயணம், பொதிகைமலை, அத்ரிமலை, தோரணமலை, நம்பிமலை, குற்றாலம் உள்பட மலை பயணங்களை மேற்கொண்டு நூலாக்கியவர். ஜமீன்தார்கள் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தவர், அதை நூலாகவும் வெளியிட்டுள்ளார். தாமிரபரணி மகா புஷ்கரத்தினை முன்னிட்டு நதியில் முழுமையாக பயணித்து “நவீன தாமிரபரணி மஹாத்மியம்” என்னும் நூலை டிஜிட்டல் முறையில் வீடியோ நூலாக வெளியிட்டு சாதனை புரிந்தவர். எட்டுதிக்கும் மதயானை, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், அப்பாவின் மீசை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அருள்தரும் அதிசய சித்தர்கள் என்னும் கட்டுரையை தினத்தந்தியில் தொடராக எழுதியுள்ளார். அந்த தொடர் தான் தற்போது உங்கள் கைகளில் நூலாக தவழ்ந்து கொண்டிருக்கிறது.

Daily Thanthi Publication
*
*
*