Thanthi Publications. Product Reviews. 27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள். 27 natchathira thalangal parigara muraigal-9788193129555
 

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்

3.4 5

மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை, பார்வை, நிறம், குணம், ஆடை, அணிகலன், பூக்கள், தொழில், நைவேத்தியம், தூபம், மந்திரம், பலன் என்று தனித்தனியாக பல்வேறு அம்சங்கள் இந்து சாஸ்திரங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளன.


அதன்படி உரிய நட்சத்திர கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதால் குறைபாடுகளைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த நூலில் 27 நட்சத்திர தலங்களையும், பரிகார முறைகளையும் செந்தூர் திருமாலன் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நட்சத்திர பலன் குறித்த பாடல்களை தஞ்சை சரஸ்வதி மகாலில் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் மிகப் பழமையான ஓலைச்சுவடிகளில் இருந்து சேகரித்து தந்துள்ளார்.


மேலும் தல வரலாறு, கோவிலின் வரலாற்றுக் குறிப்பு & சிறப்பு, வழிபடும் முறை, பூஜை நேரம், கோவில் தொலைபேசி எண்கள், நோயை விலகப் பரிகாரம், நடை திறந்திருக்கும் நேரம், போக்குவரத்து வசதி, தங்கும் வசதி போன்ற அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் அடங்கிய அரிய பொக்கிஷமாக இந்நூல் திகழ்கிறது.


பக்கத்துக்குப் பக்கம் கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.


நட்சத்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், பரிகார ஸ்தலங்கள் பற்றிய விவரங்கள், நட்சத்திரப் பலன்கள் போன்றவற்றை இதுவரையில் வெளிவராத பல தகவல்களுடன் படிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டும் கையேடு போல் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அணிந்துரையில் அளித்துள்ள புகழுரை, இந்த நூலுக்கு கிடைத்த நற்சான்றிதழாகும்.


இந்துக்கள் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

Delivery: 1 week
₹180.00
வகை: ஆன்மிகம்

ஆண்டு 2016
பக்கங்கள் 208
பதிப்பு எட்டாம்
பொருள் ஆன்மீகம்
மொழி தமிழ்
ISBN No 9788193129555
செந்தூர் திருமாலன்

ஒவ்வொரு பூஜைக்கும், விரதத்திற்கும் தனி மகிமை உண்டு. எந்தப் பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும், என்ன விரதத்தை கடைப்பிடித்தால் விரும்பியது நிறைவேறும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் பூஜைகள், விரதங்கள், அவற்றை பற்றிய புராண சாஸ்திர விளக்கம், விரதமுறைகள் மற்றும் விரதபலன்கள், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் 'வாழ்வை வளமாக்கும் பூஜை&விரதமுறைகள்' என்ற தலைப்பில் செந்தூர் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்செந்தூர் மண்ணின் மைந்தரான செந்தூர் திருமாலனின் இயற்பெயர் எஸ்.நாராயணன். தஞ்சை தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். சித்தானந்த சுவாமிகள் வரலாறு, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன்கோவில், வில்லியனூர் மாதா, வில்லியனூர் திருக்காமேசுவரர், திருவக்கரை வக்கிர காளியம்மன் வரலாறு உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் செந்தூர் திருமாலன் எழுதி, தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட '27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்' புத்தகம் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, குறுகிய காலத்தில் பல பதிப்புகளை கண்டு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனைப்படைத்தது.  இந்த நூல் எழுத சிவாச்சாரியார்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் சில பட்டாச்சாரியர்களின் நேர்காணல், களப்பணிகள் மேற்கொண்டும் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.  'வாழ்வை வளமாக்கும் பூஜை&விரதமுறைகள்' நூலை படித்து விட்டு, வேலூர் பொற்கோவில் நிறுவனர் அருட்திரு சக்தி அம்மா, "விரதங்கள் குறித்து பல உண்மைகளையும், புராண சாஸ்திர விளக்கங்களையும், விரதத்தின் முறைகளையும் மற்றும் விரதத்தின் பலன்களையும், பூஜைகள் பற்றியும் முழுமையான தகவல்களுடன் 'பூஜை&விரத அகராதி' போல் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது. இந்நூல் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞான பொக்கிஷம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

DailyThanthi Publication
- 4/25/2019 4:47 PM
Good
- 2/22/2019 12:14 PM
அருமை
- 3/9/2018 1:07 PM
27  நட்சத்திரம் குறித்த அருமையான நூல்
- 6/12/2017 10:38 AM
நன்று
- 6/12/2017 10:19 AM
நன்று
*
*
*