Thanthi Publications. பழந்தமிழ் இலக்கியம் - தொல்லியல்
 

பழந்தமிழ் இலக்கியம் - தொல்லியல்

View as Grid List
Sort by
Display per page

ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம்

ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே பரவியது என்பதற்கும் ஆதாரமாக இருப்பது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடந்த அகழாய்வுகளே. அதை ஆய்வு கண்ணோட்டத்தில் "தோண்டி" எடுத்து தமிழ் இனத்தின் பெருமையை இந்த நூலில் ஆசிரியர் அமுதன் பறைசாற்றி இருக்கிறார்.

ஒரு பல்கலைக் கழகம் குழு அமைத்து ஆற்ற வேண்டிய பெரும் பணியை தனி மனிதராக ஆற்றி இருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமே என்பதை இந்தநூலின் ஒவ்வொரு பக்கமும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.


தினத்தந்தி ஞாயிறு மலரில் 49 வாரங்கள் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பை பெற்ற தொடர். இப்போது அழகிய வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது.


"இந்த நூலை அறிவுலகம் மகிழ்ந்து பார்க்கும்; ஆராய்ச்சி உலகம் வியந்து பார்க்கும். ஒரு தவத்தைப்போல இந்தத் திருப்பணியை மேற்கொண்ட ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்த அரிய நூலை அழகுறத் தந்த தினத்தந்திக்கு என் வாழ்நாள் வணக்கம். என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

₹180.00

இதயம் தொட்ட பழமொழிகள்

தினத்தந்தி நாளிதழில் செவ்வாய்தோறும் வெளிவரும் அருள்தரும் ஆன்மிகம் இலவச இணைப்பில் ஜோதிடக் கலைமணி சிவல்புரி சிங்காரம் அவர்கள் இதயம் தொட்ட பழமொழிகள் என்ற தலைப்பில் 175 வாரங்கள் எழுதி வந்ததன் தொகுப்பே இந்நூல். இதில் 46 தலைப்புகளில் 300 பழமொழிகளும் அதற்கான விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. நமது நாட்டில் முன்னோர்கள் ஏராளமான பழமொழிகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை பழைய மொழிகள் தானே என்று உதாசீனப்படுத்தாமல், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வைர வரிகள் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான புது விளக்கங்களையும் தருகிறார்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது, ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று இருக்க வேண்டும். ஏனெனில் மூலிகை வைத்தியர்கள் வேரைக் கொண்டு வந்து கஷாயம் போடுவார்கள்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பது பழமொழி. ஊரார் பிள்ளை என்பது மனைவியைக் குறிக்கும் சொல். அவளை நல்ல முறையில் கவனித்தால் கருவிலே உள்ள தன் பிள்ளை தானே வளரும் என்பதாக புது விளக்கம் தருகிறார். மேலும் பல பழமொழிகளுக்கு ஆன்மிக, ஜோதிடரீதியில் அழகிய முறையில் விளக்குகிறார்.

அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது ஒரு பழமொழி. இங்கே அடி என்பது ஆண்டவனின் திருவடி என்றும் அவனது திருவடியைப் பணிந்தோருக்கு சேதாரம் இல்லை என்று கூறுகிறார். இதைப்போல இன்னொரு பழமொழி, ஐந்திற்கு இரண்டு பழுதில்லை & சிவாயநம என்ற பஞ் சாட்சரத்தை தினமும் உச்சரிரித்தால் சிவனது அருளுக்கு பாத்திரமாகலாம். வயதான காலத்தில் உச்சரிக்க முடியாமல் போனால் சிவா என்ற இரண்டு எழுத்தை மட்டும் உச்சரித்தால் நமக்கு சிறப்பான வாழ்க்கை அமையும். அதனால்தான் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இப்படி எண்ணற்ற பழமொழிகளுக்கு வியப்பூட்டும் விளக்கங்கள் உள்ளது.  

₹160.00

இதயம் கவர்ந்த இலக்கியக் காட்சிகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்புடன் திகழ்வது சங்க இலக்கியம். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் காதலையும், வீரத்தையும் பறைசாட்டும் காலப் பெட்டகம் ஆகும்.
இலக்கியங்கள் கற்பனையை மட்டும் சொல்லவில்லை. மனிதாபிமானங்களையும் வளர்த்து, மனித மனங்களை மென்மைப்படுத்தி மேன்மைப்படுத்துகின்றது.
இலக்கியம்தான் ஒரு மனிதனின் ஆளுமையை வளர்த்து, வாழும் வாழ்க்கையைத் கற்றுத் தருகிறது. இலக்கியம் இன்பம் தரும் ஓர் இனிய கலை.
அத்தகைய இன்பம், சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை புதையலாய்ப் புதைந்து கிடக்கின்றது.
இலக்கியத்தில் இடம்பெற்ற இதயம் கவர்ந்த காட்சிகளை இந்த நூலில் பேராசிரியர் க. இராமச்சந்திரன் அழகுற படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
தினத்தந்தி 'முத்துச்சரம்' பகுதியில் வெளிவந்தபோது, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது. நூல் முழுவதும் காணப்படும் இதயத்தை ஈரமாக்கும் இலக்கிய காட்சிகள், சிந்தனைக்கு விருந்தளிக்கிறது.

₹180.00