Thanthi Publications. ஆன்மிகம்
 

ஆன்மிகம்

View as Grid List
Sort by
Display per page

மகாசக்தி மனிதர்கள்

ஆன்மிகம் என்னும் கடலில் அதன் ஆழம் வரை சென்று முத்து எடுத்த அரிதான மனிதர்களையே "மகாசக்தி மனிதர்கள்" என்று போற்றுகிறோம். அத்தகைய மனிதர்களைப் பற்றி தினத்தந்தி வெள்ளி மலரில் என்.கணேசன் எழுதிய தொடர் இப்போது நூலாகவெளி வந்துள்ளது.


இந்த நூலில் ஆதிசங்கரர், த்ரை லைங்க சுவாமிகள், மகாஅவதார் பாபாஜி, யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, ஷீரடி சாய்பாபா போன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கூறுகிறார். மேலும், நினைக்கும் மணத்தையும், பொருளையும் வரவழைத்த விசுத் தானந்தர், விஷத்தை உண்ணும் யோகி நரசிங்க சுவாமி, கண்களைக் கட்டிக் கொண்டு கரும்பலகையில் எழுதுவதைப் படித்துக் காட்டும் குடா பக்ஸ், அமெரிக்காவில் மழையை வரவழைத்த சுவாமி லக்ஷ்மண்ஜு ரைனா, உணவில்லாமல், நீரில்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிரஹலாத் ஞானி, இதயம் நின்றும் இறக்காத சுவாமி ராமா, அந்தரத்தில் மிதக்கும் தமிழ்நாட்டு யோகி சுப்பையா புலவர், மண்ணில் 40 நாட்கள் புதைந்து உயிரோடு வெளிவந்த யோகி ஹரிதாஸ், வெறும் கைகளால் புலிகளை அடக்கிய சோஹம் சுவாமி, மற்றவர்களின் எண்ணங்களையும் அறிய முடிந்த ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, இறந்த மூன்று நாட்களில் உயிர்தெழுந்த ஷீரடி சாய்பாபா என்று மகான்கள் வாழ்வில் நடந்த ஏராளமான செய்திகளை ஒரு நாவலைப்போல சுவாரசியத்துடன் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.

₹200.00

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

'வளமுடன், நலமுடன் வாழ்க' என்பதே ஒருவருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் 'செல்வ வளம் பெருகச் செய்யும் மந்திரங்கள்' 'திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள்' 'கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள்' 'கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள்' 'சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள்' 'சந்தான பாக்கியம் தரும் மந்திரங்கள்' 'உடல் நலம் காக்கும் உன்னத மந்திரங்கள்' என்று 25 தலைப்புகளில் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய இந்து மந்திரங்களை ஸ்ரீ ஜானகிராம் இந்த நூலில் சொல்லித் தருகிறார். நூலில் ஆங்காங்கே அலங்கரிக்கும் இந்து கடவுள்களின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. ஒவ்வொரு இந்துக்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல். மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்.

₹170.00

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள்

விரதமும், பூஜையும் இந்து மதத்தின் இரு கண்கள். மனிதன் முழுமையாக வாழ்வதற்கும், உயிர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் விரதங்கள் இன்றியமையாதவை. ஐம்புலன்களை அடக்கி இறைவனிடம் சரணாகதி நிலையை அடைய விரதங்கள் உதவுகின்றன.

இந்த நூலில் துன்பங்கள் நீங்க, செல்வம் பெருக, திருமணத்தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வி சிறக்க, தொழில் தடைகள் நீங்க, பகை விலக, நவக்கிரக தோஷம் நீங்க, தீர்க்க சுமங்கலி வரம் அருள, எதிரிகளை வெல்ல, நீடித்த ஆயுள் பெற, ஐஸ்வர்யம் பெருக, முக்தி பேறு கிடைக்க என்னென்ன விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்தநூலில் செந்தூர் திருமாலன் விரிவாக எழுதியுள்ளார்.


இந்த நூலில் சங்கடஹர சதுர்த்தி முதல் பங்குனி உத்திரம் வரை 25 விரதங்களும், அது தொடர்பான வண்ணப்படங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு விரதமும் உருவான விதம், விரத முறைகள், விரதத்தால் கிடைக்கும் பயன்கள், விரதத்துக்குரிய காயத்ரி மந்திரம் என பயனுள்ள பல தகவல்களை புராண நூல்கள் அடிப்படையிலும், ஆராய்ச்சி கண்ணோட்டத்துடனும் எழுதியுள்ளார். எந்தெந்த பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும்? விரதம் இருக்க வேண்டுமா? அந்த விரதத்தை எப்படி இருப்பது? எந்தக் கோவிலுக்குப் போனால் விசேஷம் போன்ற விவரங்களும் கூறப்பட்டுள்ளன. மேலும் ஆனந்தம் தரும் அனுமன் வழிபாடு தொடங்கி பகை, பிணி போக்கும் கருட பஞ்சமி வரையிலான 16 வகை பூஜை முறைகளையும் இந்த நூலில் கூறியுள்ளார்.

 

"விரதங்கள் பற்றிய பல உண்மைகளையும், புராண சாஸ்திர விளக்கங்களையும், விரதத்தின் முறைகளையும், விரதத்தின் பலன்களையும் பற்றி முழுமையான தகவல்களுடன் தொகுத்து
ஒரு "விரத அகராதி" போல் வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது.


இந்நூல் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞானப் பொக்கிஷம் ஆகும். இதில் இடம் பெற்ற வண்ணப்படங்கள் வழிபாட்டுக்குரியவை" என்று வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா அணிந்துரையில் அளித்துள்ள பாராட்டுரை, இந்த நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

₹180.00

நோய் தீர்க்கும் சிவாலயங்கள்

நோய் தீர்க்கும் சிவாலயங்கள் தினத்தந்தியில் செவ்வாய்தோறும்
வெளிவரும் அருள்தரும் ஆன்மிகம் இணைப்பில் டாக்டர்.ச.தமிழரசன் எழுதிய "நோய் தீர்க்கும் சிவாலயங்கள்"என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் நோய் தீர்க்கும் தலங்களாகக் கருதப்படும் ஆலயங்களுக்கு நேரில் சென்று தெய்வீகச் செய்திகளைச் சேகரித்து அதை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

மேலும் அந்த நோய்கள் குறித்த மருத்துவக் கருத்துகளையும் கூறுகிறார். இந்த நூலில் பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன், தோல் நோய் தீர்த்த திருத்துருத்தி, சனி பகவானின் வாத நோய் போக்கிய திருவாதவூர், வலிப்பு நோய் விரட்டிய திருவாசி, சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர், புற்று நோயைக் கட்டுப்படுத்தும் சிவாலயம், குளிர் காய்ச்சல் போக்கும் ஜுரஹரேஸ்வரர் என 33 சிவாலயங்கள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.


மேலும் கோவில் அமைவிடம், நடை திறந்திருக்கும் நேரம், தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கி இருப்பது பக்தர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும்.

₹150.00

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்

மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை, பார்வை, நிறம், குணம், ஆடை, அணிகலன், பூக்கள், தொழில், நைவேத்தியம், தூபம், மந்திரம், பலன் என்று தனித்தனியாக பல்வேறு அம்சங்கள் இந்து சாஸ்திரங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளன.


அதன்படி உரிய நட்சத்திர கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதால் குறைபாடுகளைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த நூலில் 27 நட்சத்திர தலங்களையும், பரிகார முறைகளையும் செந்தூர் திருமாலன் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நட்சத்திர பலன் குறித்த பாடல்களை தஞ்சை சரஸ்வதி மகாலில் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் மிகப் பழமையான ஓலைச்சுவடிகளில் இருந்து சேகரித்து தந்துள்ளார்.


மேலும் தல வரலாறு, கோவிலின் வரலாற்றுக் குறிப்பு & சிறப்பு, வழிபடும் முறை, பூஜை நேரம், கோவில் தொலைபேசி எண்கள், நோயை விலகப் பரிகாரம், நடை திறந்திருக்கும் நேரம், போக்குவரத்து வசதி, தங்கும் வசதி போன்ற அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் அடங்கிய அரிய பொக்கிஷமாக இந்நூல் திகழ்கிறது.


பக்கத்துக்குப் பக்கம் கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.


நட்சத்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், பரிகார ஸ்தலங்கள் பற்றிய விவரங்கள், நட்சத்திரப் பலன்கள் போன்றவற்றை இதுவரையில் வெளிவராத பல தகவல்களுடன் படிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டும் கையேடு போல் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அணிந்துரையில் அளித்துள்ள புகழுரை, இந்த நூலுக்கு கிடைத்த நற்சான்றிதழாகும்.


இந்துக்கள் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

₹180.00

ஆலயவழிபாடு ஏன்? எதற்கு? எப்படி?

உலகியல் நல்வாழ்வுக்காக இந்து மதம் எண்ணற்ற தத்துவங்களை வழங்கியுள்ளது. ஆலய வழிபாட்டுக்கு பல நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஆலய வழிபாடு குறித்த அனைத்து செய்திகளையும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது. நமது உடலுக்கும் ஆலய அமைப்புக்கும் இடையே ஒரு ரகசியம் இருக்கிறது? கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அது எப்படி? கும்பாபிஷேக கிரியைகள் என்ன? பூஜை செய்வது எப்படி? தேங்காய் உடைப்பது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு பத்திரிகையாளர் செ.செந்தில் குமார் இந்த நூலில் எளிய நடையில் பதில் அளித்துள்ளார்.

ஆலய வழிபாடு என்பது மனிதர்களுக்கு பயிற்சியையும், முயற்சியையும் தருகிறது. இதற்காகவே முன்னோர்கள் ஆலயங்களில் கருவறை, பிரகாரம், ராஜகோபுரம், கொடிமரம், உட்பிரகார சன்னதி என்று ஏற்படுத்தியுள்ளனர். இவற்றில் அர்த்தமுள்ள ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. 

அதுபோல இறைவனை வழிபடும்போது செய்யப்படும் அபிஷேகம், ஆராதனை, மலர் அலங்காரம், திருநீறு, தீர்த்-தம், வாகனம், தீபம், தேர், நைவேத்தியம் போன்ற எல்லா விஷயங்களிலும் ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன என்று கூறும் ஆசிரியர் அதற்காக விடைகளைக் கூறுகிறார். மாலை மலர் நாளிதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது. கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள். பக்தர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

 

₹200.00