Thanthi Publications. Product Reviews. வாருங்கள் சீரடி சாய்பாபாவை தரிசிப்போம். varungal sriradi saibabavai tharisippom
 

வாருங்கள் சீரடி சாய்பாபாவை தரிசிப்போம்

5.0 2

வாருங்கள்... சீ:ரடி சாய்பாபாவை தரிசிப்போம் புத்தகம் :


சாய்பாபா வாழ்ந்த காலத்தில் பதிவான "சத்சரிதம்" என்ற புத்தகமே அவரைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. அந்த "சத்சரிதம்" பதிவுகளையும் கடந்து, பல்வேறு புதிய தகவல்களுடன் இந்த நூலை எழுத்தாளரும் பத்திரிக்கை யாளருமான செ.செந்தில்குமார் எழுதியுள்ளார்கள்.

சீரடி சாய்பாபா அற்புதங்கள் மட்டுமே நிகழ்த்தியவர் அல்லர்; அவர் ஓர் அவதார புருஷர் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் பாபாவின் மகிமைகளை இந்த நூலில் அவர் விளக்கியுள்ளார்.

சீரடிக்கு 4 முறை சென்று கள ஆய்வு செய்ததன் அடிப்படையில் சாய்பாபா, பிறப்பு, வளர்ப்பு பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் மனதில் தினம் தினம் உச்சரிக்கப்படும் புனிதச் சொல் பாபா. இந்த மந்திரச் சொல்லுக்குரிய மகத்துவத்தை இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக எழுதியுள்ளார்.

"புத்தகத்தைப் படிக்க எடுத்தால் கீழே வைக்க இயலவில்லை அப்படி ஒரு எழுத்து. பாபாவைப்பற்றி இதைவிட சிறப்பாக வேறுயாரும் எழுதிவிட முடியாது என்று நினைக்க வைக்கிற எழுத்து. நம்மைக் கட்டிப்போடுகிற ஏழுத்து. "என்று அணிந்துரையில் எழுத்தாளர் இந்துமதி கூறி இருப்பது முற்றிலும் உண்மை. ஒவ்வொரு சாய்பக்தரின் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்.

 

Delivery: 1 week
₹200.00
வகை: ஆன்மிகம்

ஆண்டு 2018
பக்கங்கள் 272
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் ஆன்மிகம்
மொழி தமிழ்
ISBN No 978-81-936633-3-2
செ.செந்தில் குமார்

இந்நூலின் ஆசிரியர் செ. செந்தில்குமார். இவர் தமிழ்நாட்டின் நம்பர் - 1 மாலை நாளிதழான சென்னை மாலைமலரில் பொறுப்பாசிரியராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத் துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படிக்கும்போது கேம்பஸ் நியூஸ் இதழில் ஏராளமான கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ராணி வார இதழில் துணை ஆசிரியராக பணிபுரிந்த போது, வேலூர் சிறையில் உள்ள பெண் கொலையாளிகள் பற்றி ஆய்வு செய்து, பெண் கைதிகளின் உண்மை கதையைத் தொடராக எழுதினார். அமானுஷ்யம் தொடர்பான ஆவியே நில் கொல் என்றொரு தொடர் எழுதியுள்ளார். கொல்லிமலை குள்ளன் என்ற சிறுவர் கதையை சிந்து எனும் புனைப்பெயரில் படைத்துள்ளார். தற்போது மாலைமலரில் சீரடி சாய்பாபா தொடர், ராணி வார இதழில் வெளிச்சத்துக்கு வரும் சித்தர்கள் தொடர் எழுதியுள்ளார்.

Daily thanthi Publication
- 9/8/2018 7:10 AM
சாய்பாபா பக்தர்கள் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்
- 8/28/2018 6:28 AM
சரியான தளம்
நன்றி
*
*
*