Thanthi Publications. Product Reviews. அதிகாலை இருட்டு. Athikalai Irudu-9788193298688
 

அதிகாலை இருட்டு

No reviews

தேவிபாலா நாவல் என்று சொன்னாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. அவர் எழுதி தினத்தந்தி குடும்ப மலரில் "அதிகாலை இருட்டு" என்ற தலைப்பில் வெளிவந்த நாவல் இது. தலைப்பைப் பார்த்தவுடன் இது "துப்பறியும் தொடர் என்று தோன்றும். ஆனால் இது முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான குடும்ப நாவல். சீதாவை அவளுடைய காதலன் சாரதி கைவிடுகிறான். ஒரு பெண் குழந்தைக்கு தாயான சீதா, அந்த உண்மையை மறைத்து சபாபதியை மணந்து கோடீஸ்வரியாகிறாள். மகள் காஞ்சனாவை சீதா அடையாளம் கண்டு கொண்டபோதிலும் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அந்தஸ்து தடுக்கிறது. இறுதியில் சாரதி, காஞ்சனா, சீதா, சாரதியின் மகன் சுனில் ஆகியோர் ஒரே நேரத்தில் சந்திக்கிறார்கள். உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. "இந்த உண்மை சபாபதிக்கும், சாரதியின் மனைவி ராஜிக்கும் தெரிய வேண்டாம். எனக்கு இரண்டு அம்மா; இரண்டு அப்பா" என்று காஞ்சனா சொல்ல கதை சுபமாக முடிகிறது. பாசத்துக்கு ஏங்கும் இதயங்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது, இந்த நாவல்.

 

 

Delivery: 3-5 days
₹120.00
வகை: நாவல்

ஆண்டு 2017
பக்கங்கள் 272
பதிப்பு முதல்
பொருள் நாவல்
மொழி தமிழ்
ISBN No 9788193298688
தேவி பாலா

எழுத வந்தது 1981-ல். இதுவரை, 36 வருடங்களில் சிறுகதை, தொடர்கதை, நாவல்கள், குறுநாவல்கள் என 8 ஆயிரத்துக்கும் மேலே! அதற்கு மேலே எண்ணவில்லை. முதல் படைப்பு கலைமகள் பத்திரிகையில். எல்லா பிரபல வார, மாத, தின இதழ்களிலும் படைப்புகள் வெளியாகி விட்டன! உச்சிக்குக் கொண்டு வந்தது மடிசார் மாமி என்ற தொடர். சின்னத்திரையில் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும், 12,000 எபிசோடுகளுக்கு மேலே படைப்புகள் வெளியாகிவிட்டது கதை, திரைக்கதை, வசனம்! 4 முறை மயிலாப்பூர் அகாடமி விருது.  தமிழக அரசின் விருது - சிறந்த கதாசிரியருக்காக! ஏ.வி.எம்., ராடன், கவிதாலயா, விகடன் போன்ற எல்லா பிரபல நிறுவனங்களுக்கும் எழுதியாகிவிட்டது! இயக்குனர் அமரர் கே. பாலசந்தர் முதல் இப்போதுள்ள புதுமுக இயக்குனர் வரை அனைவரிடமும் பணிபுரிந்த அனுபவம். பயணம் தொடர்கிறது! தேவிபாலாவின் பணியும் தொடர்கிறது.

Daily Thanthi Publication
*
*
*