Thanthi Publications. Product Reviews. அமானுஷ்ய ஆன்மிகம். Amanushya Anmiham - 9788193584095
 

அமானுஷ்ய ஆன்மிகம்

5.0 1

அமானுஷ்ய சக்திகளும், ஆன்மிகமும் பண்டைய காலத்திலேயே பின்னிப் பிணைந்திருந்தன. தங்களுக்கு மீறிய சக்திகளையெல்லாம் இறை சக்தியாகவே பார்த்து, இறைவன் தந்ததாகவே பாவித்து, அமானுஷ்ய சக்திகளை ஆன்மிகத்தின் ஒரு முக்கிய பாகமாகவே அக்காலத்தில் இருந்தே மக்கள் கருதி வந்தார்கள். ஆபத்து காலங்களில் தங்களைக் காப்பாற்றவும், தேவையான சமயங்களில் தங்களை வழி நடத்தவும், இறை வழிபாடு நடத்தி அந்தச் சக்திகளை பெற்றுக் கொண்டார்கள்.
பூஜை, விரதம், மந்திரங்கள் போன்று ஆன்மிகத்தின் இன்னொரு வடிவமான வூடு, அகோரி, ஷாமனிஷம் குறித்து இந்த நூலில் என்.கணேசன் விரிவாக விளக்கியுள்ளார். இது தினத்தந்தியில் தொடராக வந்தபோது வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. ஆன்மிகத்திலும், அமானுஷ்ய சக்திகளிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

Delivery: 1 week
₹100.00
வகை: ஆன்மிகம்

ஆண்டு 2018
பக்கங்கள் 144
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் ஆன்மிகம்
மொழி தமிழ்
ISBN No 9788193584095
என்.கணேசன்

ஆழ்மனசக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் போன்ற துறைகளில் நிறைய எழுதியுள்ள என்.கணேசனின் எழுத்துகளுக்கு புத்தக உலகிலும், இணையத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல பத்திரிகைகளில் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலக்கிய சிந்தனை உள்பட பல பரிசுகள் பெற்றவை.  இவரது நூல்களில் 'ஆழ்மனதின் அற்புதசக்திகள்’,  'பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்’, 'வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’, 'பரம(ன்) இரகசியம்', 'அமானுஷ்யன்' ஆகியவை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தினத்தந்தியில் 'அறிவார்ந்த ஆன்மிகம்’ என்ற தலைப்பில் ஆன்மிக நிதர்சன உண்மைகளையும், ஆன்மிகச் செயல்களுக்குப் பின் இருக்கும் அறிவியல் காரணங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் ஒரு வருடகாலம் எழுதி வந்தார். அது தினத்தந்தி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வங்கி ஊழியரான இவர் கோவையைச் சேர்ந்தவர்.

Daily Thanthi Publication
- 8/4/2018 11:48 AM
ஆன்மிகம் புத்தகம்
*
*
*