Thanthi Publications. Product Reviews. ஆளுமைத் திறன் (பாதை தெரியுது பார்!). aalumai thiran pathai theriuthu paar-9788193580691
 

ஆளுமைத் திறன் (பாதை தெரியுது பார்!)

2.0 2

தினத்தந்தியில் "மாணவர் ஸ்பெஷல்" பகுதியில் "பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் நெல்லை கவிநேசன் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது "ஆளுமைத் திறன்: பாதை தெரியுது பார்" என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் "ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?" "நல்ல மனப்பாங்கை உருவாக்குவது எப்படி?" "உணர்வுகளைக் கையாளுவது எப்படி?" ஆகிய தலைப்புகள் அடங்கியுள்ளன. இளமைப் பருவத்திலேயே ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் சாதனைகளைப் புரிய முடியும். அதை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆசிரியர் எளிய நடையில் புரிய வைக்கிறார். ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள இந்த நூல் சிறந்த வழிகாட்டி; அறிவுபூர்வமான உணர்வுகளை வளர்க்க உதவும் கருத்துக் கருவூலம்; வாழ்க்கையில் சாதனை புரிய எண்ணும் மாணவர்களுக்கு இது ஒரு கலங்கரை விளக்கம்.

₹170.00
வகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்

ஆண்டு 2015
பக்கங்கள் 296
பதிப்பு இரண்டாம்
பொருள் தன்னம்பிக்கை
மொழி தமிழ்
ISBN No 9788193580691
நெல்லை கவிநேசன்

நெல்லை கவிநேசன் (எஸ்.நாராயணராஜன்), திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுமார் 29 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது வணிக நிர்வாக இயல்துறையின் தலைவர். விளம்பரம் பற்றி ஆய்வு செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, இளைஞர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார். பல்வேறு வார, மாத மற்றும் நாளிதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் எழுதி எழுத்துத்துறையில் முத்திரை பதித்தவர். மேலும் ஆல் இந்திய ரேடியோ, ஹலோ எஃப்.எம். போன்ற வானொலிகளிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கியுள்ளார். கல்வி, ஆன்மிகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தொழில், வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறைகளில் 40&க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தினத்தந்தியில் ''மாணவர் ஸ்பெஷல்'' பகுதியில், ''பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி?'' என்ற தலைப்பில் இவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் இடம்பெற்ற, ''பிறரோடு இணைந்து பழகுவது எப்படி?'', ''மன அழுத்தத்தை மாற்றுவது எப்படி?'', ''முரண்பாடுகளை கையாளுவது எப்படி?'' ஆகிய பகுதிகளை இணைத்து ''பழகிப் பார்ப்போம் வாருங்கள்'' என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

daily thanthi publication
- 2/23/2017 12:50 PM
நன்று
- 2/23/2017 12:38 PM
நன்று
*
*
*